வணக்கம்,
வலைஎழுத்து எனக்கு புதிது. கடந்த சில மாதங்களாக சில பல இணையதளங்களை மேய்ந்து அதனதன் சாரம்சங்களை அலசி ஆராய ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொன்றும் ஒவ்வொறு விடயங்களில் மேம்பட்டிருப்பது அல்லது பிரபல்யமாய் இருப்பதை தெரிந்துகொண்டேன்.
இந்த வலைதளங்களில் தமிழ் மொழிப்பயன்பாடு அதாவது வழக்குச்சொற்களுக்கு மாற்றாக சொற்பிரயோகம் மிகவும் தூக்கலாக இருப்பதையும் கன்டேன். இது எனக்கு வருமா என்று தயங்கி தயங்கி பின்வாங்கியதை தெரிந்துகொண்டு சிறுகுழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போன்று நண்பர் 'படுக்காளி' என்னை கட்டாயப்படுத்தி எழுதித்தான் ஆகவேண்டும் என்று எல்லா உதவிகளையும் செய்துகொடுததார். அவருக்கு என் முதல் வணக்கம்.
ஜெயமோகன் மற்றும் மனுஷ்யபுத்தினுக்கு கிடைதத மறைந்த திரு. சுந்தர ராமசாமி போன்ற மோதிரக்கை எனக்கும் கிடைத்திருக்கிறது என்ற
நம்பிக்கையோடு எழுத்துக்கடலில் குதிக்கிறேன். முத்துச் சிப்பிகளோடு வருகிறேனா அல்லது வெறும் சிப்பிகளோடு கரையேறுவேனா என்பதை காலம்தான் சொல்லும். எழுதத்தூண்டிய நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல உரித்தாக்குகின்றேன்.
+2 படித்த காலகட்டம் சட்டென்று நினைவில் நிழலாடுகிறது.
'தேன்துளி' என்ற கைஎழுத்து பிரதி 3 மாதங்களுக்கு ஒரு முறை நான் தங்கி இருந்த பள்ளி விடுதியிலிருந்து வெளிவரும். அன்றைய நாட்களில் அச்சு பதிப்பில் புத்தகங்கள் குறைவு. கலை தாகம் தீர்க்க, கையால் எழுதியும், வரைந்தும் நாமே புத்தகம் தயாரிப்பது கையெழுத்துப் பிரதி.
மொத்தம் 3 பிரதிகள் மட்டுமே வரும். ஒவ்வொரு பிரதியும் 40 பக்கங்கள் ; கதை, கவிதை, கட்டுரைகளை உடன் பயிலும் மாணவர்களிடமிருந்து வாங்கிச் சேர்ப்பதற்குள போதும்போது மென்றாகிவிடும்.
கடைசி இரண்டு நாட்களுக்கு முன்னற்தான் எழுதவே உட்காருவோம். நாங்கள் 4 பேர், அதில் இருவர் தற்போது கத்தோலிக்க மதகுருக்களாகவும், மூன்றாமவர் கல்லூரி பேராசிரியராகவும் இருக்கின்றனர்) மட்டுமே விடியவிடிய
அமர்ந்து எழுதி எப்படியாவது 3 பிரதிகளை முடித்துவிடுவோம். மறுநாள் காலை அந்த பிரதிகளை விடுதி பொறுப்பாளரிடம் கொடுக்கும் போது அவர் தரும் பாராட்டுச்சொற்களில் எல்லா அசதிகளும் பட்ட துன்பகங்களும் ஓடியே போகும். அதுதான் எங்களுக்கு கிடைக்கும் விலைமதிப்பில்லாத பரிசும்கூட.
கையெழுத்துப் பிரதி இன்றைய தொழில் நுட்பத்தால் வலைப் பதிவு.
காலங்கள் மாறினாலும்,கலை இலக்கிய தாகம் மாறுவதில்லை.
எனது இந்த முயற்சிக்கு ஆதரவு வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment